"மனிதனை மிஞ்சும் ரோபோக்கள்!"..

Keerthi
2 years ago
"மனிதனை மிஞ்சும் ரோபோக்கள்!"..

சீன நாட்டில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் கண்காட்சி நடைபெறவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் ரோபோக்களின் செயல்திறன் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில் டிரம்ஸ் இசைப்பது, செஸ் விளையாடுவது மற்றும் மசாஜ் செய்வது போன்ற செயல்களை செய்யக்கூடிய திறன் படைத்த ரோபோக்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் படி உணவகங்களில் உணவு அளிக்கின்றன.

மிச்சிகன் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ, சாப்பாடுகளை டோர் டெலிவரி செய்கிறது. இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கண்களை அசைப்பது, தலையை அசைப்பது போன்று மனிதர்களுக்கு சரிசமமான ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். மேலும், கைகளை காண்பித்தால், நகங்களுக்கு பாலீஸ் போடும் ரோபோக்கள் சான்பிரான்சிஸ்கோவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பல வகையான மிருகங்களின் அசைவுகளை சிறிதும் மாறாமல் அப்படியே செய்யும் ரோபோக்கள் மற்றும் காவல்துறை, ராணுவம் போன்ற பல துறைகளுக்கு உதவி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் பலவகையான ரோபோக்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ரோபோக்களை, விரைவில் சீனாவில் நடக்க உள்ள செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் கண்காட்சியில் வைக்கவுள்ளனர். உலக நாடுகளிலிருந்து மொத்தமாக சுமார் 300 ரோபோக்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டிருக்கிறது.